Published : 05 Jun 2022 07:03 AM
Last Updated : 05 Jun 2022 07:03 AM
சென்னை: அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் சென்னையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், அமமுகவின் இதய தெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் வியாசர்பாடி என்.ராஜீ தலைமையில் மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் அமைப்புசாரா உடலுழைப்பு மற்றும் கட்டுமான சங்கத்தினர் உள்ளிட்டோர் இணைந்தனர்.
போக்குவரத்துக் கழக மதுரை மண்டல அமமுக தொழிற்சங்கத்தின் எஸ்.சரவணன், டி.செல்வராஜ், வி.செந்தில், ஆர்.கவிராஜன், திருவண்ணாமலை மண்டல அமமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்டோரும் இணைந்தனர்.
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களை சேர்ந்த அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மொத்தம் 120 பேர் நேற்று அதிமுக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் ஆர்.கமலக்கண்ணன் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT