Published : 04 Jun 2022 03:11 PM
Last Updated : 04 Jun 2022 03:11 PM

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதை: நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்திர நடைபாதை வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரையை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்க மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் நடைபாதை அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.

இதன்படி 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட உள்ளது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் பாதை அமைக்கப்படவுள்ளது. ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

காந்தி சிலை அருகே இந்த நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால். நம்ம சென்னை செல்பி பாயிண்ட பின்புறம் இதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி இதை அமைப்பதற்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 8.8 லட்சம் மதிப்பில் மணல் பரப்பில் இயக்கும் 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் மாநகராட்சியால் வாங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x