Published : 30 May 2022 06:26 AM
Last Updated : 30 May 2022 06:26 AM

இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்: சொத்துவரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சொத்து வரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி சொத்து உரிமையாளர்களை 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1,200 சதுரஅடி வரை, 1,201 முதல் 1,800 சதுரஅடி வரை, 1,800 சதுரஅடிக்கு மேல் என 4 வகையாகப் பிரித்து, அவற்றில் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள், பிரதான சென்னையில் உள்ள கட்டிடங்கள், விரிவாக்கப்பட்ட சென்னையில் உள்ள கட்டிடங்கள் என வகைப்படுத்தி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் ஆட்சேபங்களைப் பெற்று, மாமன்றத்தில் பரிசீலத்து சொத்துவரி உயர்வை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும் காலி மனைகளுக்கான சொத்துவரி, ஓர் சதுரஅடிக்கு 50 பைசாவில் இருந்து ரூ.1 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வு தொடர்பாக மன்றத் தீர்மானம் கொண்டு வந்து, மன்ற ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இதற்கு குடியிருப்பு உரிமையாளர்கள், குடியிருப்பு அல்லாத வணிக கட்டிட உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருவோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சியின் சொத்துவரி உயர்வு தொடர்பாக ஏப்ரல் 12-ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சொத்து வரி உயர்வு தொடர்பாக ஆட்சேபங்கள் இருப்பின், எழுத்துப்பூர்வமாக மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 30 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையில் சுமார் 30 ஆட்சேப மனுக்கள் மட்டுமே வந்திருந்தன.

கடந்த மாதம் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நடைபெற்ற பின்னர், இன்று (மே 30) மாமன்றம் கூடுகிறது. இதில். சொத்துவரி உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தற்போது ஆண்டுக்கு ரூ.700 கோடி சொத்துவரி வருவாய் உள்ள நிலையில், அது ரூ.1,400 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்றைய கூட்டத்தில், குப்பைகள் அகற்றாதது, சொத்துவரி உயர்வு தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்க அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

30 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையில் சுமார் 30 ஆட்சேப மனுக்கள் மட்டுமே வந்திருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x