Published : 27 May 2016 11:21 AM
Last Updated : 27 May 2016 11:21 AM

உதகை மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது: 1,30,000 மலர்களால் சென்னை சென்ட்ரல் வடிவமைப்பு

உதகை தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கும் மலர் கண் காட்சியின் சிறப்பம்சமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பல வண்ண ரோஜா மற்றும் கார்னேசன் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் வடிவமைக்கப்படுகிறது.

உதகை தாவரவியல் பூங்கா வில் இந்த ஆண்டு 120-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாள் நடக்கிறது. புதிய அரசு பதவியேற்று நடக் கும் முதல் விழா இது. இந்த ஆண்டில் சிறப்பம்சமாக 15,000 மலர்த் தொட்டிகளில் ஓரியண் டல் லில்லி போன்று 194 ரகங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் பல வண்ண ரோஜா மற்றும் கார்னேசன் மலர்களைக் கொண்டு 68 அடி நீளமும் 10 அடி அகலமும் 30 அடி உயரமுள்ள, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வடிவமைக் கப்படுகிறது. மேலும், 10 அடி நீளம், 4 அடி அகலம், 6 அடி உயரம் கொண்ட சிட்டுக்குருவி, 7500 பல வண்ண கார்னேசன் மலர்களால் வடிவமைக் கப்படுகிறது.

விழாவை, வேளாண் அமைச்சர் துரைகண்ணு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பேருந்துகள்

சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடுதல் சுற்று பஸ்கள், பார்க் அன்ட் ரெய்ட் பேருந்துகளும் மலர் கண்காட்சி நடக்கும் மூன்று நாட்களும் இயக்கப்படவுள்ளன. இது தவிர கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையத்துக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளன.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘சுற்றுலா பயணிகள் வருகை அதிக மாக இருந்தால், கூடுதலாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும்.

மலர் கண்காட்சி நடக்கும் 3 நாட்கள் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலையில் பேருந்துகள் பழுதாகி நின்றால், உடனுக்குடன் சீரமைக்க மொபைல் வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதேபோல், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் பழுதாகி நின்றாலும், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படா மல் இருக்க கிரேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சிறப்பு பஸ்கள் முறையாக இயங்க ஏற்றவாறு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், இந்த வழித்தடங்களில் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x