Published : 28 May 2022 07:02 AM
Last Updated : 28 May 2022 07:02 AM

செங்கையில் ஊட்டச்சத்து பூங்கா தொடக்கம்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்துப் பூங்காவை நேற்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊட்டச்சத்துபூங்காவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.45லட்சம் மதிப்பிட்டில் இந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுனத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் ஊட்டச்சத்து பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் 1,000 நாட்களுக்கு குழந்தைகளுக்கு என்ன ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்பது தொடர்பான விவரங்கள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "இந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து பூங்கா மூலம் கர்ப்பிணிகள் ஊட்டச் சத்து குறித்து விழிப்புணர்வு பெற முடியும். சிசு மரணத்தை தவிர்க்க ஊட்டச்சத்துக்களின் பங்கு அதிகம்" என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, "இம் மருத்துவமனையில் ஊட்டசத்து பூங்கா தவிர நிசான் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் ரூ.1.3 கோடியில் பார்வையாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கருவறை வடிவத்தில், உலக சுகாதார நிறுவனத்தில் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் வடிவமைப்பில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குநர் நா.நாராயண பாபு, டீன் ஜெ.முத்துக்குமரன், கண்காணிப்பாளர் க.அறிவொளி மற்றும் உள்ளாட்சித் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x