Published : 26 May 2022 06:05 AM
Last Updated : 26 May 2022 06:05 AM

கிருஷ்ணாபுரம் பள்ளியில் நூலகம்: கரோனாவால் இறந்த ஆசிரியை குடும்பத்தினர் அமைத்தனர்

கடலூர்: புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு ஒன்றை கரோனாவால் உயிரிழந்த ஆசிரியை ஒருவரின் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் மதிப்பில் நூலகம் அமைத்து கொடுத்துள்ளனர்.

புவனகிரி அருகே கிருஷ்ணா புரம் கிராமத்தில் உள்ள ஊராட்சிஒன்றிய தொடக்கப் பள்ளியில், புவனகிரியைச் சேர்ந்த பாமினி என்றஆசிரியை கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் 2-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வந்தார். கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்து ஓராண்டு முடிவுற்றதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அவர் பணியாற்றிய பள்ளிக்கு அவரது தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில், மாணவர்களுக்குப் பயன்படும் பல்வேறு நூல்கள் அடங்கிய நூலகத்தை அமைத்து கொடுத்தனர். மாணவர்கள் அமர மேஜைகள், வழங்கியுள்ளனர். மேலும் கிருஷ்ணாபுரம் முன்னாள் மாணவர்கள் சார்பாக ஒளி காட்சி வடிவில் மாணவர்களுக்கு பாடம் நடத்திட உதவும் புரொஜெக்டரும் வழங்கப்பட்டது.

வட்டார கல்வி அலுவலர் லட்சுமி, பள்ளி தலைமையாசிரியர் ராணி, உதவி ஆசிரியர் ஆனந்தபெலிக்ஸ் மற்றும் கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகம் அமைத்து கொத்த ஆசிரியை குடும்பத்தினருக்கு கிராம மக்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x