Published : 24 May 2022 06:40 AM
Last Updated : 24 May 2022 06:40 AM
ஓசூர்: ஓசூர் அரசு கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மூலம் முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள சாம்பல்பட்டி குமாரபட்டி, நாட்லப் பள்ளி, பசலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மினி பேருந்தில் 15 பெண்கள் வேலைவாய்ப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். முகாம் முடிந்ததும் மினிபேருந்து ஓசூர் சீதாராம்நகர் பகுதியில் செல்லும் போது சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 வயது பெண் குழந்தை பிரித்தா, அவரது தாய் நதியா, புனிதா, ராஜேஸ்வரி, மாரியம்மாள், தனலட்சுமி உட்பட 15 பெண்கள் காயமடைந்தனர். மினி பேருந்தில் பயணம் செய்த ஒரு ஆணும் படுகாயமடைந்தார். அனைவரும் மீட்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரையும் ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT