Published : 18 May 2022 06:00 AM
Last Updated : 18 May 2022 06:00 AM

பரமக்குடி: தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவி

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜபட்டினத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற ரவிச்சந்திரன்(52). இவர் உரப்புளி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மொட்டை போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். வேலையில் இருந்தபோது நேற்று முன்தினம் ரவி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ரவியின் ஒரே மகள் சுரேகா(17), தான் படித்த பரமக்குடி அலங்கார மாத மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி வருகிறார். நேற்று மாணவி சுரேகா வணிகவியல் தேர்வு எழுத இருந்த நிலையில் தந்தை உயிரிழந்தார். இருந்தபோதும் சுரேகா சோகத்துடன் தேர்வுக்குச் சென்றார்.

வணிகவியல் தேர்வை எழுதிவிட்டு சுரேகா வீட்டுக்குச் சென்றார். பிற்பகல் 3 மணிக்கு மேல் அவரது தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x