Published : 28 May 2016 10:02 AM
Last Updated : 28 May 2016 10:02 AM

‘தி இந்து’ நடத்தும் சென்னையின் ‘சூப்பர் அம்மா’ போட்டி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

‘தி இந்து’ சார்பில் சென்னையின் ‘சூப்பர் அம்மா’ தேர்வு போட்டி ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பெண்கள் தங்கள் குடும்பத்துக் காக 24 மணி நேரமும் அயராது உழைக்கின்றனர். அதிலும், அம்மாக் களின் பொறுப்பு அதிகம். அவர்க ளது பணியை அங்கீகரித்து, அவர்க ளுக்கு ‘தி இந்து’ மரியாதை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘தி இந்து’, ஏஆர்சி பன்னாட்டு கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, சென்னை யின் ‘சூப்பர் அம்மா’ தேர்வு போட் டியை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் நடத்துகிறது. பெண்கள் தங்கள் சமையல் கலைத் திறன், படைப்பாற்றல், தனித்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்த இது சிறந்த களமாக இருக்கும்.

தொடக்கநிலைப் போட்டிகள் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது. அரையிறுதி, இறுதிப் போட்டிகள் 5-ம் தேதி நடைபெறும். சென்னை யின் ‘சூப்பர் அம்மா’வாக தேர்ந் தெடுக்கப்படுபவருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பெண்கள் ஆன்லைனில் >www.thehindu.com/supermom2016 என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 9940615300, 9566400700 ஆகிய எண்களை, வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். thehindusuper mom2016@gmail.com என்ற இமெ யில் மூலமாகவும் தங்கள் பெயர், முகவரி, கைபேசி எண் ஆகிய வற்றை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி, நிவாஸ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ், கரூர் வைஸ்யா வங்கி, ஃபோரம் விஜயா மால் ஆகியவை யும் இணைந்து நடத்துகின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x