Published : 13 May 2022 06:00 AM
Last Updated : 13 May 2022 06:00 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தியது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். அதேபோல, இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் வீடுகளில் ஃபேன், ஏசி பயன்பாடு அதிகரித்து, மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்தது. இதனால் மின்சாரப் பாற்றாக்குறை ஏற்பட்டு, பல இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவான அசானி புயலின் தாக்கத்தால் கடந்த 3 நாட்களாகசென்னையில் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிர்ந்த காற்றும் வீசுகிறது.
கோடை வாசஸ்தலம்போல...
மாநகராட்சிப் பூங்காக்கள், மரங்கள் உள்ள பகுதிகளில் குளிர்ச்சி மிகுந்து, ரம்மியமான சூழல் நிலவிவருகிறது. இதனால், சென்னைமாநகரமே கோடை வாசஸ்தலம்போல மாறிவிட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் பலரும் சென்னையின் பல்வேறு பகுதிகளை செல்போன் மூலம் படம் எடுத்து, சென்னை மாநகரம் உதகைபோல மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதே வானிலை வார இறுதி நாட்களிலும் நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT