Published : 03 May 2016 10:11 AM
Last Updated : 03 May 2016 10:11 AM

ஜனநாயகம் அழிந்து வருகிறது: டி.கே. ரங்கராஜன் வேதனை

திண்டுக்கல் நாகல் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளர் என்.பாண்டியை ஆதரித்து டி.கே.ரங்கராஜன் எம்பி பேசிய தாவது: இந்த தேர்தல் அகில இந்திய அளவிலும், மாநில அளவி லும் முக்கியத்துவம் உள்ளது. திமுக தலைவர்கள் எங்களை கூட்டணிக்கு அழைத்தனர். கூட்டணி சேர்ந்தால் தேர்தல் முடிந்தவுடன், இது நாங்கள் போட்ட பிச்சை என்பார்கள்.

ஆத்தூர் தொகுதியில் எப்போதுமே விசுவநாதனை எதிர்த்து திமுக சாதாரண வேட்பாளரை நிறுத்தும். பெரியசாமியை எதிர்த்து அதிமுக சாதாரண வேட்பாளரை நிறுத்தும். இருவரும் வெற்றி பெறுவர். இந்தமுறை ஜெயலலிதா என்ன நினைத்தாரோ, இருவரையும் மோதவிட்டுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, அந்தந்த தொகுதிகளுக்கு அதிமுக, திமுகவினர் பணத்தை கொண்டுபோய் சேர்த்துவிட்டனர்.

ஜனநாயகம் கொஞ்சம் கொஞ் சமாக அழிந்து கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த மக்களால் தான் முடியும். டாஸ்மாக் கடை களை மூடிவிட்டால், அதனால் ஏற்படும் இழப்பான ரூ. 24 ஆயிரம் கோடிக்கு மாற்று ஏற்பாடு என்ன என்பதை கருணாநிதி சொல்ல வில்லை. எனவே மதுவிலக்கு பற்றி ஒப்புக்கு பேசுகிறது திமுக. இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் வேலையில்லா திண் டாட்டம் காரணமாக கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம், ஜாதி மோதல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x