Published : 19 May 2016 08:10 PM
Last Updated : 19 May 2016 08:10 PM

வாக்கு சதவீதத்தில் தேமுதிகவை முந்திய பாமக, பாஜக

வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இரவு 8 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன.

அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.



கட்சிகள்

வாக்கு சதவீதம்

அதிமுக

40.8%

திமுக

31.6%

காங்கிரஸ்

6.5%

பாமக

5.3%

பாஜக

2.9%

தேமுதிக

2.4%

நாம் தமிழர் கட்சி

1.1%

மதிமுக

0.9%

விசிக

0.8%

சிபிஐ

0.8%

சிபிஎம்

0.8%

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

0.7%

தமாகா

0.5%

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x