Published : 01 May 2016 10:59 AM
Last Updated : 01 May 2016 10:59 AM

தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை: வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சேலம் போஸ் மைதானத் தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறது. வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை கருத்தில் கொண்டு வங்கிக்கடன், காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 18 மாத மோடி ஆட்சியில் ஊழல் இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் மின்வெட்டு இல்லை. மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குவது போலவே, தமிழகத்துக்கும் வழங்கப்படுகி றது. ஆனால், இங்கு மின்வெட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்ய வில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வறுமை, மின்வெட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், தரமற்ற சாலைகள், ஊழல் காணப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர வேண்டும்.

தற்போது, தமிழகத்தில் மாற் றத்தை மக்கள் விரும்புகின்றனர். ஸ்மார்ட் சிட்டியில் தமிழகத் தில் 12 இடங்கள் தேர்வுசெய்யப் பட்டுள்ளன. தமிழகம்தான் அதிக ஸ்மார்ட் சிட்டி மற்றும் 32 அம்ரூத் திட்ட சிட்டிகளைப் பெற்றுள்ளது’’ என்றார்.

பின்னர் கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வெங்கய்ய நாயுடு, ‘‘பாஜகவுக்கு வாக்களித்தால் மத்திய அரசு வழங்கும் நிதி சரியான முறையில் தமிழகத்துக்கு கிடைக்கும். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவற்றின் கொள்கைகளில் பெரிய அளவில் மாறுதல் இல்லை. காங்கிரஸ் கட்சி நிலத்தில் ஊழல், நிலத்துக்கு அடியில் நிலக்கரி ஊழல், வானத்தில் ஹெலிகாப்டர் ஊழல், காற்றில் 2ஜி ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x