Published : 19 May 2016 05:41 PM
Last Updated : 19 May 2016 05:41 PM

சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து ஸ்டாலின் பெற்றுக் கொண்ட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, "தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திமுக வலுவான எதிர்க்கட்சியாக இடம் பிடித்துள்ளது.

மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம். தமிழக சட்டப்பேரவையில் திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்" எனக் கூறினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x