Published : 30 Apr 2016 09:12 AM
Last Updated : 30 Apr 2016 09:12 AM

தேமுதிக, மநகூ, தமாகா ஆட்சியில் ஜி.ராமகிருஷ்ணனுக்கு துணை முதல்வர் பதவி: டி.கே.ரங்கராஜன் தகவல்

தேர்தலுக்குப் பிறகு தேமுதிக, மநகூ, தமாகா ஆட்சி அமைக்கும்போது தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனை துணை முதல்வராக அமரவைப்போம் என அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவை வந்திருந்த டி.கே.ரங்க ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: பூரண மதுவிலக்கு அறிவிப்பு செய்தி ருக்கும் கருணாநிதியின் கட்டுப் பாட்டில் உள்ள பலர் சாராயக் கம்பெனி நடத்துகிறார்கள். இப் போதே அந்த கம்பெனியை மூடச் சொல்லட்டும். அதேபோல், மிடாஸ் சாராயக் கம்பெனியை ஜெயல லிதா மூடச்சொல்லட்டும். அப்படி செய்தாலே மதுவின் உற்பத்தி குறைந்து குடிப்பவரின் எண் ணிக்கை சரியும். முல்லை பெரி யாறு விவகாரத்தில் கேரள மக் களின் மன உணர்வுகளை அங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சியினர் பிரதிபலிக் கின்றனர். இங்குள்ள மக்களின் மன நிலையையே நாங்கள் வெளிப்படுத்துகிறோம். கேரள அரசு இந்த விஷயத்தில் தவறு செய்தால் மார்க்சிஸ்ட் கண்டிக்கும்.

தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அமைச் சரவையில் பங்கேற்பது குறித்து அப்போது முடிவு செய்வோம். தேவைப்பட்டால் இடைத்தேர்தலில் ஜி.ராமகிருஷ்ணனை வெற்றி பெற வைத்து அவரை துணை முதல்வர் பதவியில்கூட அமர வைப்போம்’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x