Last Updated : 01 Apr, 2016 08:43 AM

 

Published : 01 Apr 2016 08:43 AM
Last Updated : 01 Apr 2016 08:43 AM

ஜெயலலிதாவை விமர்சிக்கும் மத்திய அமைச்சர்கள்: அதிமுக - பாஜக மோதலுக்கு என்ன காரணம்?

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச் சர்களும், பாஜக தலைவர்களும் விமர்சிப்பது பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு இதுவரை அதிக பட்சமாக 2.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 10 சதவீதத் துக்கும் அதிகமாக உள்ள சிறுபான் மையினரின் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயங்குவதாக கூறப்படுகிறது.

பல்வேறு சிக்கல்களில் சிக்கி யுள்ள அதிமுகவுக்கு மத்திய பாஜக அரசின் தயவு தேவைப்படுகிறது. மாநிலங்களவையிலும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் அதிமுக எம்.பி.க்களின் தயவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. ஆனாலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க தயங்குகின்றன.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அதிமுகவும், பாஜகவும் மிக நெருக்கமான கட்சிகள் என்பது போல பேசப்படுகிறது. இதில் துளி யும் உண்மை இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்து அமைப்பு களின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பல முறை முயன்றும் முடியவில்லை. அதே நேரத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்களை அவர் அடிக்கடி சந்தித்து வரு கிறார்.

தமிழகத்தில் பாஜக தலை வர்கள் பலர் வரிசையாக கொல் லப்பட்டபோது, சொந்தப் பிரச் சினை காரணமாக கொல்லப் பட்டதாக டிஜிபி அறிக்கை வெளி யிட்டார். ஜெயலலிதாவுக்கு தெரி யாமல் இது நடக்க வாய்ப்பில்லை.

சிறுபான்மையினரை திருப்தி படுத்தும் திமுக, காங்கிரஸ் பாணி அரசியலை அதிமுகவும் கையில் எடுத்துள்ளது. எனவே தான் அதி முகவை விமர்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ முகநூல், டுவிட்டர் பக்கங்களில் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் விமர்சித்து கேலிச் சித்திரங்களும், செய்திக ளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக மற்றொரு பாஜக தலைவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வாக்கு வங்கியில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் திமு கவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கு வாக்க ளிப்பதை வழக்கமாக கொண் டுள்ளனர். இதனால் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள கன்னியா குமரி, கோவை மாவட்டங்களில்கூட வெற்றி கிடைப்பதில்லை. இந்து சிந்தனையுள்ள வாக்காளர்களுக்கு அதிமுகவும் நமது எதிரி என்பதை புரிய வைக்க வேண்டும். ஆளுங்கட்சியான அதிமுகவை விமர்சிப்பதன் மூலம் தேர்தல் களத்தில் பாஜக கவனிக்கப்படும். அதற்காகவே இந்த கடுமையான விமர்சனம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x