Published : 13 Apr 2016 09:01 AM
Last Updated : 13 Apr 2016 09:01 AM

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் மாவட்ட தலைவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு: கட்சி நிர்வாகி தகவல்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இம்முறை மாவட்ட தலைவர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்படும் என்று அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தலைவர்களின் வாரிசுகளில் இப்போது கட்சிப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வரும் நபர்களுக்கு மட்டுமே தேர் தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என முடிவு செய் யப்பட்டுள்ளது. வாரிசுகளுக்கு தொகுதி கேட்டு அழுத்தம் கொடுக்கும் நபர்களை சமாளிப்பதற்காக, தன் மகன் திருமகன் ஈவேராவுக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்று இளங்கோவன் முடிவெடுத்துள்ளார்.

வாரிசுகளுக்கு சீட் கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகளிடம், “இந்த தேர்தலில் எனது மகனுக்கே சீட் கொடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிக எண்ணிக்கையில் சீட் ஒதுக்கினால்தான் கட்சியை வளர்க்கும் பணியில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நாடா ளுமன்ற தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்த வேண்டுமெனில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதனால் இந்தமுறை கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாத வாரிசுகளுக்கு சீட் வழங்க முடியாது” என்று கறாராக பேசி வருகிறார். எப்படியிருந்தாலும் இந்த முறை குறைந்தபட்சம் 50 சதவீதம் தொகுதிகள் மாவட்ட தலைவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x