Published : 02 Apr 2016 08:22 AM
Last Updated : 02 Apr 2016 08:22 AM

கருணாநிதியுடன் ஸ்டாலின் 2-வது நாளாக ஆலோசனை: காங்கிரஸுடன் ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு

காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக நேற்று ஆலோசனை நடத்தினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படை ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், எஸ்டிபிஐ கட்சிகளுடன் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் திமுக கூட்டணி யில் தமாகாவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க கடந்த மாதம் 29-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்றார். கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர், ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறி தொடர்பாக நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேமுதிக இல்லாத நிலையில், கடந்த 2011-ல் ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், 40 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆசாத்துடன் சந்திப்பு

இது தொடர்பாக கருணாநிதி யுடன் 2-வது நாளாக நேற்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதவிர திமுக வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு குறித்தும் இருவரும் விவாதித்ததாகக் கூறப்படு கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் திமுக தலைவர் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்திப்பார் என்றும் அப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தாகும் என்றும் திமுக - காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x