Published : 05 Apr 2022 06:52 AM
Last Updated : 05 Apr 2022 06:52 AM

பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: மயிலாடுதுறை புதிய எஸ்.பி என்.எஸ்.நிஷா

என்.எஸ்.நிஷா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மாவட்ட எஸ்.பி.யாக நேற்று பொறுப்பேற்ற என்.எஸ்.நிஷா தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக இருந்த சுகுணா சிங் பணியிடமாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய எஸ்.பி.யாக என்.எஸ்.நிஷா நேற்று பொறுப்பேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு கனிவுடன் போலீஸார் தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x