Published : 26 Apr 2016 07:54 AM
Last Updated : 26 Apr 2016 07:54 AM

வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ரங்கநாதனுக்கு ரூ.6 கோடிக்கு சொத்துகள்

சென்னை வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ப.ரங்கநாதன் (வயது 65) நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.6 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 922 அளவுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வில்லிவாக்கம் தொகுதி தேர்தல் அலுவலகம் ஷெனாய் நகர் புல்லா நிழற்சாலையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ப.ரங்கநாதன் நேற்று பகல் 1 மணிக்கு தனது ஆதரவாளர் களுடன் வந்தார். இத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி பி.குமாரவேல் பாண்டியனைச் சந்தித்த ரங்கநாதன் உரிய ஆவணங்கள் மற்றும் சான்று களைச் சமர்ப்பித்தும், டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தையும் செலுத்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் வேட்பாளர் களுக்கான உறுதிமொழி ஏற்றார். அந்த உறுதிமொழியை பெற்றுக் கொண்டதற்கான சான்றினை அவரிடம் தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார்.

இவர் மீது அத்துமீறியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மட்டும் நிலுவையில் இருக்கிறது.

அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்துகள் மற்றும் கடன் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரங்கநாதனின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ.3 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரத்து 5, அவரது மனைவி நளினியின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ.2 கோடியே 79 லட்சத்து 49 ஆயிரத்து 917 ஆக மொத்தம் ரூ.6 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 922.

ரங்கநாதனின் மொத்த கடன் ரூ.3 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 195, அவரது மனைவி பெயரில் உள்ள மொத்த கடன் ரூ.2 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரத்து 98 என்று வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x