Published : 01 Apr 2022 07:03 AM
Last Updated : 01 Apr 2022 07:03 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். படங்கள்:எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில், செங்கல்பட்டு மாவட்டம் செயலாளர் அனகை டி.முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காஸ் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மத்திய மாநில அரசு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது மக்கள் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் மற்றும் கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலைவாசி உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.

இதேபோல் காங்கிரஸ் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மாநிலப் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது இருசக்கர வாகனம் மற்றும் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து 100-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் பம்மலில் காங்கிரஸ்கட்சி சார்பில் அப்பகுதியைச் சார்ந்தநிர்வாகி பம்மல் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் நேற்றுகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொதுச் செயலாளர் சேகர் கண்டன உரையாற்றினார். துணைத் தலைவர் தங்கராஜ்,நகரச் செயலாளர் விஜி, பொருளாளர் தமிழன்பன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x