Published : 31 Mar 2022 06:25 AM
Last Updated : 31 Mar 2022 06:25 AM
மதுரை: நாட்டின் நலன் கருதி இடதுசாரிகள், மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் பேசினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் திடலில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் மா.கணே சன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந் திரன் வரவேற்றார். முன்னதாக திரைப்பட நடிகை ரோகிணி கலை நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைத் தார்.
இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டி ருக்கிறது. அதைப் பாதுகாக்க வேண்டிய போராட்டத்தில் தமிழகம் முதலில் நிற்கிறது. சென்னையில் முதல்வரை சந்தித்துப் பேசினேன். அப்போது பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டம் நடத்த முயற்சி எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கின்றனர்.
இப்போராட் டங்கள் மக்கள் எழுச்சியாக மாற வேண்டும்.
2024 மக்க ளவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான மாற்று அணி உருவாகும் என்றார்.
இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் பேசிய தாவது:
பாஜக தற்போது வெற்றிபெற்ற மாநிலங்களில் மதச்சார்பற்ற சக் திகள் தனித்தனியாக நின்றதால் வாக்குகள் பிரிந்து அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் இன்னல்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாக மத்திய அரசு உள்ளது. நாட்டின் நலன்கருதி இடதுசாரிகள், மதச் சார்பற்ற சக்திகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் சு.வெங் கடேசன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT