Published : 09 Apr 2016 02:10 PM
Last Updated : 09 Apr 2016 02:10 PM

தென்மாவட்டங்களில் 6 தொகுதிகளில் சீட் பெற காங்கிரஸில் கடும் போட்டி

மதுரை உட்பட 6 தென்மாவ ட்டங்களில் காங்கிரஸ் போட்டியிடும் 6 சட்டப் பேரவை தொகுதிகளில் சீட் பெற இக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக் கப்பட்டுள்ளன. இதில், மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களில் காரைக்குடி, சிவகாசி, திருமங்கலம், மதுரை வடக்கு, முதுகுளத்தூர், வேடசந்தூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் சிலர் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், கிடைத்த தொகுதிகளில் சீட் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மதுரை வடக்கு தொகுதியைப் பெற நகர் காங்கிரஸ் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், ஐஎன் டியூசி தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன், நகர் பொருளாளர் முருகேசன், வழக்கறிஞர் கார்த்திக் உட்பட பலர் போட்டியில் உள்ளனர். இவர்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளரான அன்னபூர்ணா தங்கராஜிற்கே வாய்ப்பு அதிகம். அவர் போட்டியிட விரும்பாத நிலையில் மட்டுமே வேறு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவி த்தார்.

திருமங்கலம் தொகுதியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயராமனுக்கே வாய்ப்பு வழங்கப்படும் எனக் கட்சியினர் தெரிவித்தனர். மாவட்ட கவுன்சிலர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் ஜெய ராமனும் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர். திருமங்கலம் தொகு தியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டுள்ள ஜெயராமனுக்கு தொகுதி மக்கள் நன்கு அறிமுகமானவர்கள். அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூரைச் சேர்ந்த ஜெயராமனுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

முதுகுளத்தூரில் மலேசியா பாண்டியன், குட்லக் ராஜேந்திரன், வேடசந்தூரில் சிவசக்திவேல், முகம்மது கனி, ராதாகிருஷ்ணன், காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி மகன் கரு.மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், சுதர்சன நாச்சியப்பன் எம்பி மகன் ஜெயசிம்மன், சிவகா சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் கணேசன், முன்னாள் எம்எல்ஏ சொக்கர் மகன் ராஜா ஆகியோர் சீட் பெற முயற்சித்து வருகின்றனர்.

மாநில நிர்வாகிகள் மட்டுமின்றி, சிலர் டெல்லியில் உள்ள தேசிய பொறுப்பாளர்கள் மூலமும் சிபாரிசு செய்து வருகின்றனர். வேட்பாளர் பட்டியலுடன் இன்று டெல்லி செல்லும் இளங்கோவன் கட்சித் தலைமை அனுமதியை பெற்று, வரும் 12-ம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x