Published : 26 Mar 2022 08:55 AM
Last Updated : 26 Mar 2022 08:55 AM

இலங்கையின் நிலை கவலையளிக்கிறது: திருச்செங்கோட்டில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

ஈரோடு: இலங்கையின் தற்போதைய நிலை கவலையளிப்பதாக உள்ளது என வாழும் கலை அமைப்பின் நிறுவனர்   ரவிசங்கர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, வாழும் கலை அமைப்பின்நிறுவனர்   ரவிசங்கர் நேற்றுவருகை தந்தார். பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பயணித்து, திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் தரையிறங்கிய,   ரவிசங்கரை, எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், சரஸ்வதி, திருமகன் ஈவெரா, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, கே.எஸ்.ஆர். கல்வி நிறுவன தலைவர் கே.எஸ்.ரங்கசாமி, செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது;

வாழும் கலை அமைப்பின் சார்பில், பாபநாசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வசதியாக கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 19 நதிகளின் இணைப்பு பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது. அந்தப் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், இந்த பயணம் மேற்கொண்டுள்ளேன்.

இலங்கையில் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி வரும் தமிழர்களுக்கு, உதவ வேண்டும் என நினைக்கிறோம். இலங்கை நிலை குறித்து அறிய ஒரு குழு அமைக்கப்பட்டு, அங்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x