Published : 26 Mar 2022 06:43 AM
Last Updated : 26 Mar 2022 06:43 AM

ஓசூர் புனுகன்தொட்டி பகுதியில் 336 அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

ஓசூர்: ஓசூர் புனுகன்தொட்டி பகுதியில் 336 அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், புனுகன்தொட்டி பகுதியில் 336 குடியிருப்புகள், கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதால், ஓசூர் மாநகராட்சி பகுதியில் வசித்து வரும் சொந்த வீடில்லாத பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். வீடுகள் பெற விண்ணப்பிக்க, சிறப்பு முகாம் வரும் 1-ம் தேதி ஓசூர் புனுகன்தொட்டியிலும், வரும் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை, ஓசூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதி அலுவலகத்திலும், காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

விண்ணப்பத்துடன், குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் பயனாளிகள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

இக்குடியிருப்புக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்கீட்டு தொகையான ரூ. 2.90 லட்சம் வாரியத்துக்கு முன் பணமாக செலுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும், அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்கிற உறுதிமொழி படிவமும் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x