Published : 07 Apr 2016 10:11 AM
Last Updated : 07 Apr 2016 10:11 AM

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினரிடம் நேற்று வழங்கப்பட்டது. தொகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது குறித்து காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டு குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் 41 தொகுதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதையடுத்து இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினரிடம் அளித்தனர். இந்தப் பட்டியலில் திமுகவினருக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பல உள்ளதால் இதுகுறித்து பரிசீலித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், ‘‘தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது நாளை (இன்று) தெரியவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x