Published : 16 Apr 2016 10:55 AM
Last Updated : 16 Apr 2016 10:55 AM

திமுக கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் முகம்மது சுலைமான், மாநிலத் தலைவர் எம்.பசீர் அகமது, மாநிலப் பொதுச்செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்டோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x