Published : 20 Apr 2016 08:35 AM
Last Updated : 20 Apr 2016 08:35 AM

சட்டம் கொண்டு வந்தாலே பூரண மதுவிலக்குதான்: ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் பதில்

பெரம்பலூர், குன்னம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி களில் போட்டியிடும் திமுக, கூட்ட ணிக் கட்சி வேட்பாளர்களை ஆத ரித்து பெரம்பலூர் மாவட்டம் குன் னத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக இப்போது கூறும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டு களில் வீதிக்கு வீதி டாஸ்மாக் கடை களை அதிகப்படுத்தியதைத் தவிர, உருப்படியாக எதுவும் செய்ய வில்லை. எனவே, மதுவிலக்கு பற்றி பேச ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை. மதுவுக்கு எதிரான போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்ததுதான் இந்த ஆட்சியின் சாதனை.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மதுவிலக்கு அறிவிப் பில் ‘பூரண மதுவிலக்கு’என்று இல்லை என்கிறார் ஜெயலலிதா. மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்றாலே அது பூரண மதுவிலக்காகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

குன்னம் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது, “அரசியல்வாதிகளின் வழக்கமான ஆடைக்குப் பதிலாக பேன்ட், சட்டையில் நான் மக்களை தேடி சந்திப்பதை ‘ஸ்டாலின் ஷூட் டிங் போகிறார்’ என்று கிண்டல் செய் கிறார்கள். அட, ஷூட்டிங் இல்லப்பா மீட்டிங் போகிறேன் என்று நான் விளக்க வேண்டியிருக்கிறது. டீ கடையில் டீ குடித்தால் கிண்டல் செய்கிறார்கள். கடைக்குள் போனதும் தான் தெரிந்தது அது அதிமுககாரர் கடை என்று. அதன்பிறகு ஒரே வாரத்தில் அவர் திமுகவுக்கு மாறி விட்டது வேறு விஷயம்” எனப் பேசி கூட்டத்தினரை கலகலக்க வைத்தார்.

கனிமொழி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) திமுக வேட்பாளர் வி.பி. துரைசாமியை ஆதரித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி நேற்று ராசிபுரத்தில் பேசும் போது, ‘ஜெயலலிதா தேர்தல் கூட் டத்தில் அவருக்கு ஒரு மேடை, வேட் பாளர்களுக்கு ஒரு மேடை. இலக்கு நிர்ணயித்து மதுபானம் விற் பனை செய்தது அதிமுக ஆட்சியில் தான். சசிகலாவின் மிடாஸ் மதுபான ஆலை யில் இருந்து 11 ஆயிரம் கோடிக்கு மதுபானம் அதிமுக அரசு வாங்கி யது. மக்களை ஏமாற்றும் ஆட்சிதான் அதிமுக ஆட்சி. கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு குறைந்துள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x