Published : 22 Apr 2016 12:38 PM
Last Updated : 22 Apr 2016 12:38 PM

இது 2-வது முறை: பாமகவில் 4 வேட்பாளர்கள் மாற்றம்

மயிலாப்பூர், தளி, பாலக்கோடு, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 தொகுதிகளின் பா.ம.க. வேட்பாளர்கள் மாற்றபட்டுள்ளனர்.

இது குறித்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் கீழ்க்கண்ட விவரப்படி பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் மாற்றப்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் மாற்றம் விவரம்:

1.மயிலாப்பூர் - மீனாட்சி ஆனந்துக்கு பதிலாக என்.சுரேஷ்குமார்

2. தளி - வெ.கந்தசாமிக்கு பதிலாக அருண்ராஜன்

3. பாலக்கோடு - அ.சரவணனுக்கு பதிலாக கு.மன்னன்

4. திருத்துறைப்பூண்டி - உ.காசிநாதனுக்கு பதிலாக ச.ராஜமோகன்

வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ள நிலையில், பாமக வேட்பாளர்கள் 4 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

முன்னதாக உளுந்தூர்பேட்டை தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டார். விஜயகாந்துக்கு எதிராக பாலு களமிறக்கப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x