Published : 15 Mar 2022 08:40 AM
Last Updated : 15 Mar 2022 08:40 AM

சிதம்பரத்தில் அனுமதியின்றி சப்பரத்தை இழுத்துச் சென்ற 10 தீட்சிதர்கள் மீது வழக்கு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் பங்குனி உத்திரத் திருவிழா நடந்து வருகிறது. 5-வது நாள் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவர் முருகன் எழுந்தருள, கீழரத வீதி வழியாக புறப்பாடு நடந்தது.

சப்பரம் தெற்கு ரத வீதி வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலைக்கு மேலே சென்று கொண்டிருந்த போக்குவரத்து சிக்னல் வயர் (மின் கடத்தி கம்பி) உரசியதில் வயர் அறுந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில் அனுமதிஇன்றி சப்பரம் இழுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கிருந்த 10 தீட்சிதர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், போலீஸார் சிக்னல் வயரை மின்சார ஊழியரைக் கொண்டு அகற்றி, சப்பரத்தை அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x