Published : 30 Apr 2016 02:51 PM
Last Updated : 30 Apr 2016 02:51 PM

அரவக்குறிச்சி திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.99.11 கோடி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியின் சொத்து விவரம் என வேட்பாளர் பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''எனது பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.52,83,53,889, அசையா சொத்தின் மதிப்பு ரூ.46,27,69,100. மொத்தம் ரூ.99,11,22,989. கடன் ரூ.13,50,96,871. எனது மனைவி அன்னம்மாள் பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4,74,71,319. அசையா சொத்தின் மதிப்பு ரூ.7,53,92,950. கடன் ரூ.52,52,596'' என்று கே.சி.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x