Published : 08 Mar 2022 07:59 AM
Last Updated : 08 Mar 2022 07:59 AM

அரசியல்வாதிகளின் கையில் கோயில் சொத்துகள்: மதுரை ஆதீனம் ஆதங்கம்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் உள்ள மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான சாட்சிநாதர் சுவாமி கோயிலுக்கு, மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து அவர் கோயிலில் தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் சொத்துகளும் அரசியல்வாதிகளின் கைவசம் உள்ளன. இதில் கட்சிப் பாகுபாடு ஏதும் இல்லை. நாடு முழுவதும் கோயில் சொத்துகளை வைத்துக்கொண்டு கோயிலுக்கு குத்தகை தராதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகத்தான் பிறப்பார்கள். குத்தகை தராததால் கோயில்களை முறையாக பராமரிப்பு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் வெளிநாட்டுக் கல்வி என்பது தேவையற்றது. அப்படி போனதால் தான், தற்போது உக்ரைனில் நடக்கும் போரால் இந்திய மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ரஷ்யா - உக்ரைன் போரில் இந்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதாகும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதையும், தமிழில் அர்ச்சனை செய்வதையும் மனமார வரவேற்கிறேன். திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயில் புனரமைக்கப்பட்டு, திருத்தேர் சீரமைக்கப்பட்டு வரும் மாசியில் தேரோட்டம் நடக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x