Published : 16 Apr 2016 09:06 AM
Last Updated : 16 Apr 2016 09:06 AM

‘உதய்’ மின் திட்டத்தில் தமிழக அரசு இணையவில்லை: பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் ‘உதய்’ மின் திட் டத்தில் தமிழக அரசு இணையவில்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று கோவை வந்தார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் கட்சிகளாகவே உள்ளன. இவ்விரு கட்சிகளும் தமிழகத்துக்கு நல்லாட்சியை தரத் தவறிவிட்டன.

அதேசமயம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழலற்ற நல்லாட்சியை வழங்கி வருவதால், பாஜகவுக்கு மக்க ளிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத் துக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். அவர் பங்கேற் கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை யில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது. மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு, சிறைபி டித்தல் சம்பவங்கள் குறைந்துள் ளன.

மத்திய அரசு முயற்சி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் 20 மாநிலங்கள் தங்களை இணைத்துக்கொண்டு பலனடைந்துள்ளன. ஆனால், தமிழக அரசு இணையாததால், தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x