Published : 27 Apr 2016 09:16 AM
Last Updated : 27 Apr 2016 09:16 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைதி காக்கும் பாமக வேட்பாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பாமக வேட்பாளர்கள் பிரச்சாரத்து க்கான ஆரம்பக் கட்டப் பணிகளைக் கூட தொடங்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். பரசுராமன் (திண்டுக்கல்), சண்முகம் (ஒட்டன் சத்திரம்), சீரங்கன் (நத்தம்), நாகராஜன் (பழநி), பழனிச்சாமி (வேடசந்தூர்), நிர்மலா ஞான சவுந்தரி (ஆத்தூர்), ராமமூர்த்தி (நிலக்கோட்டை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் இதுவரை யாரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டாமல் அமைதி காத்து வருகின்றனர். குறைந்தபட்சம் நிர்வாகிகள் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் கூட நடத்தாமல் உள்ளனர். நேற்று முன்தினம் திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் பரசுராமன் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திமுக, அதிமுக, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பிரச்சாரத்தின் ஆரம்பகட்ட பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் பாமக வேட் பாளர்கள் அமைதியாக இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: வேட்பாளர்கள் முக்கிய பிரமுகர் களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். திண்டுக் கல் மாவட்டத்திலுள்ள தொகுதி வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி நாளை (ஏப். 28) திண்டுக் கல் மணிக்கூண்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு பிரச்சாரம் தீவிரமடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x