Published : 05 Mar 2022 04:30 AM
Last Updated : 05 Mar 2022 04:30 AM

சின்னசேலம் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்வு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் லாவண்யா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னர் அங்கு வந்த சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான உதயசூரியன், ‘வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யக்கூடாது’ என உத்தரவிட்டார்.

ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 16-வது வார்டு கவுன்சிலரும், திமுக நகரச் செயலாளருமான செந்தில்குமார், உதயசூரியனுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கோஷமிட்டவாறே அங்கிருந்து வெளியேறினார். இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் துணைத் தலைவர் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

சங்கராபுரத்திலும் ஒத்திவைப்பு

சங்கராபுரம் பேரூராட்சித் தலைவராக ரோஜா ரமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் துணைத் தலைவர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான உறுப்பினர்கள் வராததால், துணைத் தலைவர் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக செயல் அலுவலர் சம்பத்குமார் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x