

சென்னை அண்ணா நகர் தொகுதியில் அமைச்சர் கோகுல இந்திராவை எதிர்த்து இளைஞர் மற்றும் மாணவர் கட்சியின் மாநில தலைவரான நடிகர் ப.குமரன் போட்டியிடுகிறார்.
கடந்த 2010-ல் வெளியான ‘தைரியம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் குமரன். தொடர்ந்து ‘வருஷ நாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 2001-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் யூனியன் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
யூனியன் தலைவராக பணியாற்றியபோது மாவட்ட ஆட்சியரால் பாராட்டப்பட்ட இவர், 2003-ல் இளைஞர் மற்றும் மாணவர் கட்சியை தொடங் கினார். தமிழகம் முழுவதும் குழுக்களை உருவாக்கி மாணவர், இளைஞர்களுக்கு உயர்கல்வி பயிற்சி வகுப்புகள், மாவட்ட மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இளைஞர் மற்றும் மாணவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இவர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. சென்னை அண்ணா நகர் தொகு தியில் அமைச்சர் கோகுல இந்திராவை எதிர்த்து நடிகர் குமரன் போட்டியிடுகிறார்.