Published : 15 Apr 2016 09:58 AM
Last Updated : 15 Apr 2016 09:58 AM

திமுக வேட்பாளர்களில் 93 புதுமுகங்கள்: தனித் தொகுதிகளில் புதியவர்கள் அதிகம்

திமுக வேட்பாளர் பட்டியலில் 93 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் பலர், தனித் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில் 93 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனித் தொகுதிகளில் அதிகமான புதுமுகங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பகுதிவாரியாக போட்டியிடும் புதுமுகங்கள் விவரம்:

சென்னை

டாக்டர் கே.பரிமளம் (பொன் னேரி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள் ளூர்), இ.பரந்தாமன் (பூந்தமல்லி - தனி), சா.மு.நாசர் (ஆவடி), எஸ்.சுதர் சனம் (மாதவரம்), சிம்லா முத்துச்சோழன் (ஆர்.கே.நகர்), தாயகம் கவி (திருவிக நகர் - தனி), கே.எஸ்.ரவிச்சந்திரன் (எழும்பூர் - தனி), கு.க.செல்வம் (ஆயிரம் விளக்கு), எம்.கே.மோகன் (அண்ணா நகர்), எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்க நல்லூர்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), டாக்டர் ஆர்.டி.அரசு (செய்யூர் - தனி), நெல்லிக்குப்பம் புகழேந்தி (மதுராந்தகம் - தனி), சிவிஎம்பி எழிலரசன் (காஞ்சிபுரம்)

மதுரை

பி.டி.ஆர்.பி. தியாகராஜன் (மதுரை மத்தி), எம்.பாலச்சந்திரன் (மதுரை தெற்கு), பிரியா தேன் மொழி (சோழவந்தான்), இள மகிழன் (உசிலம்பட்டி), அ.பா.ரகு பதி (மேலூர்), அன்பழகன் (நிலக் கோட்டை), சக்தி (எ) சத்தியநாதன் (சிவகங்கை), சித்ரா செல்வி (மானாமதுரை), தங்கபாண்டியன் (ராஜபாளையம்), சீனிவாசன் (சாத் தூர்), சுப.த.திவாகரன் (திரு வாடனை), அன்புமணி (சங்கரன் கோவில்), சுப்பிரமணியன் (கோவில் பட்டி), பீமராஜ் (விளாத்திக்குளம்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்).

திருச்சி

பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), கணேசன் (மண்ணச்சநல்லூர்), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), ஸ்டாலின் குமார் (துறையூர் - தனி), எஸ்.எஸ்.ராஜ்குமார் (ஒரத்தநாடு), அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), அசோக்குமார் (பேராவூரணி), ஆடலரசன் (திருத் துறைப்பூண்டி), அன்பரசன் (கந்தர் வக்கோட்டை), ஜி.சதீஷ் (ஆலங் குடி), எம்.பழனியப்பன் (விராலி மலை), கிள்ளை ரவீந்திரன் (சீர் காழி), ராமர் (குளித்தலை), தங்க துரைராஜ் (குன்னம்),

கோவை

மீனா லோகு (கோவை வடக்கு), நா.கார்த்திக் (சிங்காநல்லூர்), கிருஷ்ணன் (எ) பையாக்கவுண்டர் (கவுண்டம்பாளையம்), சுரேந்திரன் (மேட்டுப்பாளையம்), குறிச்சி பிர பாகரன் (கிணத்துக்கடவு), தமிழ் மணி (பொள்ளாச்சி), த.பால்பாண்டி (வால்பாறை - தனி), மு.க.முத்து (உடுமலைப்பேட்டை), க.செல் வராஜ் (திருப்பூர் தெற்கு), சு.கிருஷ்ணமூர்த்தி (பல்லடம்), இரா.ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக் குளம்), இ.ஆனந்தன் (அவினாசி - தனி),

வேலூர்

எஸ்.பவானி (அரக்கோணம்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), ப.கார்த்திகேயன் (வேலூர்), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), வி.அமலு (கே.வி.குப்பம்), சி.கவிதா தண்டபாணி (ஜோலார்பேட்டை), ஏ.நல்லதம்பி (திருப்பத்தூர்), கே.வி.சேகரன் (போளூர்), எஸ்.பாபு (ஆரணி), அம்பேத்குமார் (வந்தவாசி - தனி), மு.பெ.கிரி (செங்கம் - தனி).

சேலம்

குணசேகரன் (சேலம் தெற்கு), பன்னீர்செல்வம் (சேலம் மேற்கு), அம்மாசி (ஓமலூர்), ரேகா பிரிய தர்ஷினி (கெங்கவல்லி தனி), முருகேசன் (எடப்பாடி), சச்சி தானந்தம் (மொடக்குறிச்சி), கே.பி.சாமி (பெருந்துறை), சிவக் குமார் (பவானி), ஏ.ஜி.வெங் கடாச்சலம் (அந்தியூர்), ஆர்.சத் தியா (பவானிசாகர்), எஸ்.மாலதி (ஊத்தங்கரை - தனி), இ.சி.கோவிந் தராசன் (பர்கூர்), பி.முருகன் (வேப்பனஹள்ளி), இளங்கோவன் (திருச்செங்கோடு), யுவராஜ் (குமாரபாளையம்), முருகன் (பாலக் கோடு), தடங்கம் சுப்பிரமணி (தருமபுரி), பிரபு ராஜசேகர் (பாப்பி ரெட்டிப்பட்டி), ராஜேந்திரன் (அரூர்).

விழுப்புரம்

ஆனந்தன் (விருத்தாச்சலம்), செந்தில்குமார் (சிதம்பரம்), காம ராஜ் (கள்ளக்குறிச்சி), மஸ்தான் (செஞ்சி), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), மைதிலி ராஜேந் திரன் (வானூர்), சீதாபதி சொக்கலிங்கம் (திண்டிவனம்). கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 119 தொகுதி களில் போட்டியிட்டது. இதில் உயிரிழந்தவர்கள், கட்சி மாறிய வர்கள் தவிர 50 நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தத் தேர்தலில் 169 தொகுதிகளில் அதிமுக - திமுக நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x