Published : 23 Feb 2022 06:35 AM
Last Updated : 23 Feb 2022 06:35 AM

காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூரில் அனைத்து நகராட்சிகளிலும் தலைவர் பதவிகளை ஏற்கும் திமுகவினர்

செங்கல்பட் டு நகராட்சியில் வெற்றிபெற்ற 22 திமுக வேட்பாளர்கள் முன்னாள் முதல்வர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால் அனைத்து நகராட்சிகளிலும் திமுகவினர் தலைவர் பதவிகளை வகிக்க உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இதில் மாங்காடு நகராட்சியில் மொத்தம் உள்ள 27 இடங்களில் திமுக கூட்டணி 16 இடங்களை பிடித்தது. இதில் திமுக-14, மதிமுக-2 வெற்றி பெற்றுள்ளன. அதிமுக-6 இடங்களிலும், சுயேச்சைகள்-5 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதேபோல் குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 இடங்களில் திமுக கூட்டணி 24 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக-22, காங்கிரஸ்-2 வெற்றி பெற்றுள்ளன. அதிமுக-5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை ஓர் இடத்தில் வெற்றி பெற்றார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இவற்றை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

செங்கல்பட்டு நகராட்சி 4-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்
யாஸ்மினுக்கு பணமாலை அணிவிக்கப்பட்டது

மதுராந்தகம் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக கூட்டணி-19,அதிமுக-2 இடங்களையும், சுயேச்சைகள்-3 இடங்களையும் பிடித்துள்ளன. நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில் திமுக கூட்டணி-20, அதிமுக-8, சுயேச்சைகள்-2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மறைமலை நகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக கூட்டணி-11, அதிமுக-5, தேமுதிக-2,சுயேச்சைகள்-3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகளில் திமுக-22, அதிமுக-6, விடுதலைச் சிறுத்தைகள்-1, சுயேச்சைகள்-4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உள்ளன. இதில் 21 வார்டுகளைக் கொண்ட திருத்தணி நகராட்சியில் 18-வது வார்டில்திமுக வேட்பாளர் பூ.சரஸ்வதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆகவே, மீதமுள்ள 20 வார்டுகளில் திமுக-17, அதிமுக-2, சுயேச்சை-1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

மாமல்லபுரம் பேரூராட்சியை அதிமுக கைபற் றியதை தொடர்ந்து தலைவர் வேட்பாளராக
முன்னிருத்தப்பட்டுள்ள எ.வளர்மதி எஸ்வந்ராவ் சககவுன்சிலர்களுடன் சென்று
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திருநின்றவூர் நகராட்சியின் 27 வார்டுகளில் திமுக-15, காங்கிரஸ்-2, மதிமுக-1, அதிமுக-3, பகுஜன் சமாஜ்-3, சுயேச்சை-3 வார்டுகளை கைப்பற்றியுள்ளன.

மொத்தம் 27 வார்டுகளைக் கொண்ட திருவள்ளூர் நகராட்சியில் திமுக-14, காங்கிரஸ்-1, அதிமுக-3, பாமக-1 வார்டிலும், சுயேச்சை-8 வார்டுகளிலும் வென்றுள்ளன. திருவேற்காடு நகராட்சியின் 18 வார்டுகளில் திமுக-11, காங்கிரஸ்-1, சுயேச்சை-6 வார்டுகளை கைப்பற்றியுள்ளன.

பூந்தமல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் திமுக-12,காங்கிரஸ்-1, அதிமுக-2, சுயேச்சை-6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

பொன்னேரி நகராட்சியின் 27 வார்டுகளில் திமுக-15, அதிமுக-9,சுயேச்சை-3 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x