Published : 17 Apr 2016 10:17 AM
Last Updated : 17 Apr 2016 10:17 AM

வடமாவட்டங்களில் 45 தொகுதிகளில் பாமகவை முந்த தேமுதிக தீவிரம்: உளுந்தூர்பேட்டையை குறிவைக்கும் விஜயகாந்த்

சட்டப்பேரவைத் தேர்தலில் உளுந் தூர்பேட்டை தொகுதியில் களமிறங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிவைத்துள்ளார். பாமகவுக்கு செல் வாக்கு உள்ள 45 தொகுதிகளை கைப்பற்றவும் தேமுதிக தீவிரம் காட்டுகிறது.

தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியில் தேமுதிகவுக்கு ஒதுக் கப்பட்டுள்ள 104 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் வட மாவட்டங்களில் உள்ளன. தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட பிறகே வட மாவட்டங்களில் பாமகவின் செல் வாக்கு குறையத் தொடங்கியது. இதனால்தான் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள் ளிட்டோர் விஜயகாந்தை தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது செல் வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பாமக அன்புமணியை முன்னிறுத்தி, வட மாவட்டங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகி றது. குறிப்பாக, திமுக, அதிமுக மட்டுமன்றி தேமுதிகவையும் புறக் கணிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

இதுவரை தேர்தல் பிரச்சாரங் களில் பாமகவை விமர்சிக்காமல் இருந்த விஜயகாந்த், இப்போது திமுக, அதிமுகவுடன் சேர்த்து பாம கவையும் விமர்சித்து வருகிறார். கடந்த தேர்தல்களில் பாமகவுக்கு செல்வாக்குள்ள விருத்தாசலம், ரிஷி வந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த், இந்த முறை உளுந்தூர்பேட்டையை குறிவைத்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், பாமகவுக்கு செல்வாக் குள்ள 45 தொகுதிகளில் அக்கட்சி யைவிட பெருவாரியான வாக்குகள் வாங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி கும்மிடிப்பூண்டி, திருத் தணி, அம்பத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சி புரம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப் பத்தூர், பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, செங்கம், திரு வண்ணாமலை, கலசப்பாக்கம், ஆரணி, செய்யாறு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், திண்டிவனம், கெங்க வல்லி, ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, அரியலூர், விருத்தாச லம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, மயிலாடுதுறை உட்பட 45 தொகுதி களில் தேமுதிகவினர் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x