Published : 13 Feb 2022 11:25 AM
Last Updated : 13 Feb 2022 11:25 AM
உதகை: கிறிஸ்தவ மத போதகர்களை அவதூறாக பேசுவதாக கூறி பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,கிறிஸ்தவ அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட சிறுபான்மை நலக்குழு தலைவர் ராஜன் சாமுவேல், பொதுச்செயலாளர் சகாயநாதன் ஆகியோர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாஜக தேசிய குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சமீப காலமாக கிறிஸ்தவர்களை அவதூறாக பேசி வருகிறார். குறிப்பாக, பாதிரியார்கள் அணியும் ஆடைகளை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாடு ஒரு மதசார்பற்ற நாடு. எனவே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கிறிஸ்தவர்களின் மனம் புண்படும் வகையிலும் பேசி வரும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT