Published : 27 Apr 2016 09:38 AM
Last Updated : 27 Apr 2016 09:38 AM

வைகோ தேர்தல் புறக்கணிப்பு திட்டமிட்டது, நாடகத்தனமானது: இல.கணேசன், அன்புமணி விமர்சனம்

வைகோ தேர்தலில் போட்டி யில்லை என்ற அறிவிப்பு குறித்து பாஜக மூத்த தலை வர் இல.கணேசன், பாமக இளை ஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் விமர்சனம் செய் துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இல.கணேசன் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: வைகோ தோல்வி ஏற் படும் என்று தெரிந்துகொண்ட பிறகுதான், மிகவும் சாமர்த்தி யமாக முடிவு எடுத்து தேர்தலில் போட்டியில்லை என்று அறி வித்துள்ளார். இது அவர் ஏற்கெனவே திட்டமிட்டு எடுத்த முடிவு. அவர் சொல்வதுபோன்று இரண்டு சமூகத்துக்கும் இடையே யான மோதலுக்கு அங்கே சாத்தியமில்லை.

திமுக தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் திருமங்கலம் பார்முலாவை ஏற்படுத்தி தேர்தல் வரலாற்றில் கரையை ஏற் படுத்தியது. இப்போது அது தமிழ்நாடு பார்முலா ஆகி விட்டது.

தற்போது தேர்தலில் முறைகேடுகள் செய்வதற்கு பண மூட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன. தேர்தல் அதிகாரி கள் பறிமுதல் செய்து வருகின்ற னர். இந்த பணம் எந்தக் கட்சிக்கு சொந்தமானது, யாரால் பதுக்கப்பட்டது, எடுத்த நட வடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் தேர்தல் ஆணையம் மே 16-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அன்புமணி

தருமபுரி சட்டப்பேரவை தொகுதி பாமக தேர்தல் அலுவ லகத்தை நேற்று அன்புமணி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியது:

சேலம் பாமக வேட்பாளர் அருளை மர்ம நபர்கள் தாக்கி யுள்ளனர். தமிழகம் முழுவதும் பாமக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்கவேண்டும்.இந்த சம்பவத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. அதேநேரம் வைகோ திடீரென இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை யென அறிவித்திருப்பது தோல்வி பயம் காரணமாக அவர் நடத்தும் நாடகம். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x