Published : 03 Apr 2016 09:45 AM
Last Updated : 03 Apr 2016 09:45 AM

காங்கிரஸ் பேச்சாளர்களுக்கு பயிற்சி

தமிழக காங்கிரஸ் பேச்சாளர் பயிற்சி முகாம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 40 பேச்சாளர்கள் இதில் பங்கேற்றனர். கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன், அரசியல் விமர்சகர் மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், பொதுச் செயலாளர் ஜோதி, முன்னாள் எம்எல்ஏ யசோதா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்து பேசினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி பேச வேண் டும் என்பது குறித்து ஞாநி பேசியதாவது:

தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வரும் வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டு விட்டது. இப்போது பொதுக்கூட்டங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி விவாதங் களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. விவாதங்களில் பங்கேற்க கனகச்சிதமாக பேசும் ஆற்றல் படைத்தவர்கள் தேவை. அதற்கான நபர்களை காங்கிரஸ் தயார்படுத்த வேண்டும். பேச்சாளர்களுக்கு வாசிக்கும் பழக்கமும், எழுதுவதும் அவசியம்.

அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பொதுமக்கள் அமைதி யாக கண்காணித்து வருகின்றனர். எனவே, ஒருபோதும் கண்ணியத்தை இழக்கக் கூடாது. நாகரிகமான வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும்.

இவ்வாறு ஞாநி பேசினார்.

வழக்கறிஞர்கள் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் சுதா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x