Published : 05 Apr 2016 09:14 AM
Last Updated : 05 Apr 2016 09:14 AM

2-வது கட்ட வேட்பாளர் பட்டியல்: பாஜக மையக் குழு ஆலோசனை

கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சிறிய கட்சி களுடன் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த 25-ம் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது.

2-வது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில மையக் குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலா லயத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

பாஜக தேசிய இணை அமைப்புப் பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதரராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x