Published : 04 Feb 2022 08:29 AM
Last Updated : 04 Feb 2022 08:29 AM

திமுகவில் சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக மனு தாக்கல்

தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த திமுக நிர்வாகி செல்வகுமார். படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: திமுகவில் சீட் கிடைக்காதவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சையாகக் களமிறங்கி வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி யான பிறகு முதல் முறையாகத் தேர்தலைச் சந்திப்பதால் மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவில் சீட் கிடைக்கும் எனநம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் இருந்த பலருக்கு சீட் கிடைக்கவில்லை.

சில இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் பலர் சுயேச்சையாகக் களம்காண வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சியின் 50-வது வார்டு காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதியாக இருப்பவர் செல்வகுமார். இவருக்கு திமுகசார்பில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. மாறாகக் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த செல்வகுமார், அதே வார்டில்,சுயேச்சையாக போட்டியிட நேற்றுவேட்புமனு தாக்கல் செய்தார்.முன்னதாக, இவர் மேள தாளம்முழங்க 100-க்கும் மேற்பட்ட, ஆதரவாளர்கள் புடைசூழ தன் வீட்டிலிருந்து, மாநகராட்சி அலுவலகம்வரை ஊர்வலமாக நடந்து வந்தார்.

தாம்பரம் மாநகராட்சி முதல்தேர்தலைச் சந்திக்கும் நிலையில்செல்வகுமாரைப் போல், இன்னும்பலர் சீட் கிடைக்காத அதிருப்தியில் தாங்கள் மட்டுமின்றி தங்களது குடும்பத்தினரையும் சுயேச்சைகளாக களமிறக்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x