Published : 24 Apr 2016 09:32 AM
Last Updated : 24 Apr 2016 09:32 AM

தேர்தல் பிரச்சாரத்துக்காக மோடி, சோனியா, ராகுல் தமிழகம் வருகை

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச் சாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் விரைவில் தமிழகம் வருகின்றனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் விநியோகம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. கரூரில் அதிமுக பிரமுகர் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் பண விநியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் நேரத் தில் மட்டும் எம்ஜிஆர் மீது பாசம் வரும். பிறகு அந்தப் பாசம் போய் விடும். அவரது பிரச்சார கூட்டத் துக்கு வருபவர்களை வெளியே செல்ல காவல்துறையினர் அனும திப்பதில்லை. இதனால் பலர் பலி யாகின்றனர். இதுகுறித்து டெல்லி யில் தலைமைத் தேர்தல் ஆணை யரை சந்தித்து புகார் அளித் துள்ளேன். அவர் நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் மீண்டும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைகின்றனர். தமாகாவில் இருந்து பலர் விலகி தாய் கட்சியான காங்கிரஸில் இணைகின்றனர். அவர் களை வரவேற்கிறேன். தமாகா வில் உள்ள மற்றவர்களும் தாய் கட்சி யான காங்கிரஸுக்கு வர வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து காங்கிரஸை உயர்த்துவோம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச் சாரம் செய்ய சோனியா காந்தி தமிழகம் வருகிறார். அவரும் திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் பேசுகின்றனர். தேதி இன்னும் முடிவாகவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் 4 அல்லது 5 நாட்கள் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைத்துள்ளோம். அவரும் வரு வதாக தெரிவித்துள்ளார். அவரது வருகை குறித்த தேதியும் இன்னும் முடிவாகவில்லை.

தேர்தலில் தொகுதி கிடைக்காத வர்கள் வருத்தமடைவதும், அதி ருப்தியில் எதிர்ப்பு தெரிவிப்பதும் இயல்புதான். அவர்கள் இன்னும் சில தினங்களில் பிரச்சினைகளை மறந்து கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவர். காங்கிரஸுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதி கள் ஒதுக்கப்பட்டதால் பலருக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை. அதே நேரத்தில் எங்கள் கூட்ட ணியில் தலித் மற்றும் சிறுபான்மை யினருக்கு போதிய அளவு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இளங்கோவன் தெரி வித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலர், நேற்று இளங்கோவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக மாநிலத் தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன் திருநெல்வேலி சிந்துபூந்துறை யில் பாஜக தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:

வைகோ பச்சை துண்டை தலைப்பாகையாக அணிந்திருப்பது விவசாயிகளுக்காகவா அல்லது ஜோசியத்துக்காகவா என்பது தெரிய வில்லை. நாங்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் அல்ல.

தமிழக முதல்வரின் பிரச் சாரக் கூட்டங்கள் மிகவும் அபாயக ரமானதாக மாறி வருகின்றன. ஜெய லலிதா, கடந்த 5 ஆண்டுகளாக காணொலிக் காட்சி மூலமாகவே திட்டங்களை தொடங்கி வைத்தார். அதேபோல், தற்போதும் காணொலிக் காட்சி மூலமாகவே பிரச்சாரத்தை நடத்தலாமே.

முதல்வரை பார்க்க முடிய வில்லை என்ற மத்திய அமைச்சர் களின் குற்றச்சாட்டு உண்மை. தமி ழகத்தில் பாஜக கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார். இதில் அகில இந்திய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதா ராமன் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடுகள் திருப்தி யளிக்கவில்லை. ஆளுங்கட்சிக்கு ஒருவிதமாகவும், எதிர்க்கட்சிக ளுக்கு வேறுவிதமாகவும் செயல் படுகிறது. டாஸ்மாக் கடைகள், துணிக் கடைகள் மூலம் டோக்கன்களை அதிமுகவினர் விநியோகம் செய் துள்ளதாக தெரிய வந்துள்ளது. தேர் தல் ஆணையம் காட்சிப்பொருளாக இருக்கக் கூடாது இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x