Published : 12 Apr 2016 08:17 AM
Last Updated : 12 Apr 2016 08:17 AM

எல்.கே.அத்வானி கொலை முயற்சியில் கைதானவர் வழக்கு: கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பிக்கு நோட்டீஸ்

பாஜக மூத்த தலைவர் அத்வானியைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டபோது, டிஎஸ்பியை கொல்ல முயன்றதாக பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கலான மனுவுக்கு, கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கடந்த 2011-ல் ஊழல் ஒழிப்பு யாத்திரை மேற்கொண்டார். இதற்காக அத்வானி மதுரைக்கு வந்திருந்தார். மதுரை யில் இருந்து திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு செல்லும்போது, திருமங்கலம் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு மூலம் அத்வானியைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. வெடிகுண்டு முன்கூட்டியே கண்டுபிடிக் கப்பட்டு அகற்றப்பட்டதால் அத்வானி உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர் பாக திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், முகமது ஹனீபா என்ற தென்காசி ஹனீபா மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இந்த மூவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்களை கைதுசெய்ய நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது. வத்தலகுண்டுவில் தலை மறைவாக இருந்த முகமது ஹனீபாவை கைது செய்ய முயன்றபோது, டிஎஸ்பி எம்.கார்த்திகேயனை கொல்வதற்கு முயற்சி நடைபெற்றது. இது தொடர்பாக, வத்தலகுண்டு போலீஸார் முகமது ஹனீபா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப் பட்ட முகமது ஹனீபாவிடம் ஒரு குறிப் பிட்ட மத தலைவர்களான சுரேந்திரன், மூகாம்பிகை மணி, குற்றாலநாதன், பாலாஜி கிருஷ்ணசாமி, பாஸ்கரன் ஆகி யோரின் பெயர் பட்டியல் மற்றும் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

முகமது ஹனீபா மீதான கொலை முயற்சி வழக்கு திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக் கக் கோரி, முகமது ஹனீபா தாக்கல் செய்த மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் 2014-ல் தள்ளுபடி செய்தது. அந்த உத்த ரவை மறுசீராய்வு செய்யக் கோரி முகமது ஹனீபா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘டிஎஸ்பியைக் கொலை செய்ய முயன்றதாக தன் மீது பதிவுசெய்தது பொய் வழக்கு. 8.7.2013-ல் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. எனவே என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வி.எஸ். ரவி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு கோவை சிபிசிஐடி (சிறப்பு புலனாய்வு பிரிவு) ஏடிஎஸ்பி ஏப். 15-ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x