Published : 12 Apr 2016 08:37 AM
Last Updated : 12 Apr 2016 08:37 AM

தமாகா அதிருப்தி நிர்வாகிகளுடன் பீட்டர் அல்போன்ஸ் ஆலோசனை: சோனியா முன்னிலையில் காங்கிரஸில் இணைய முடிவு

தமாகா அதிருப்தி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் பி.விஸ்வ நாதன், கார்வேந்தன், ராணி மற்றும் 15-க்கும் அதிகமான மாவட் டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

அதிமுகவுடனான கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மக்கள் நலக் கூட்ட ணியில் தமாகா இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார். கட்சி நிர்வாகி களுடன் ஆலோசிக்காமல் குடும் பத்தினரின் பேச்சைக் கேட்டு வாசன் தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார். விஜயகாந்தை முதல்வராக ஏற்க முடியாது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமாகாவில் இருந்து விலக முடிவு செய்துள்ள அவர்கள் நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள பீட்டர் அல்போன்ஸ் வீ்ட்டில் பல மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் டெல்லி சென்று சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைய அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பீட்டர் அல் போன்ஸிடம் கேட்டபோது, ‘‘வாச னின் கூட்டணி முடிவால் அதிருப்தி அடைந்துள்ள மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் தினமும் என்னுடன் பேசி வருகின்றனர். அவர்களுடன் ஆலோசித்து விரை வில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவை அறிவிப்போம்’’ என்றார்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் அதிமுகவிலும், பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் பலர் காங்கிரஸிலும் இணைய திட்டமிட்டுள்ளதால் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொகுதிகளில் மாற்றம்?

பீட்டர் அல்போன்ஸ் உள் ளிட்ட தமாகா அதிருப்தி தலைவர்கள், காங்கிரஸ் மேலிடத் தலைவர் களுடனும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவ னுடனும் பேசி வருகின்றனர். அதி ருப்தியாளர்களுக்கு சில தொகுதி களை அளிக்க காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இளங்கோவன் நேற்று சந்தித்துப் பேசினார். பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட சிலருக்காக காங்கி ரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக ளில் மாற்றம் செய்வது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. திமுக வுக்கு ஒதுக்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி யின் ஜோதிமணி பிரச்சாரம் செய்து வருவது குறித்து கருணா நிதியிடம் இளங்கோவன் விளக் கம் அளித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x