Published : 25 Apr 2016 07:45 AM
Last Updated : 25 Apr 2016 07:45 AM

மயிலை சத்யா தலைமையில் தமாகா அதிருப்தியாளர்கள் கூட்டம்

தமாகா மாநில செயலாளராக உள்ள மயிலை சத்யா தலை மையில் தமாகா அதிருப்தி யாளர்களின் கூட்டம் சென்னை மயிலாப்பூர் மாங்கொல் லையில் நேற்று மாலை நடந் தது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக இருப்பவர் மயிலை சத்யா. வழக்கறிஞரான இவர், தமாகா வில் தனக்கு மயிலாப்பூர் தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக முனவர் பாட்சாவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தனது ஆதர வாளர்களை கூட்டி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை யில் மயிலை சத்யா பொதுக் கூட்டம் நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “ஜி.கே.மூப்ப னாரால் ஈர்க்கப்பட்டு அரசிய லுக்கு வந்தவன் நான். 1996-ல் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கியபோது நானும் அக்கட்சியில் சேர்ந் தேன். ஜி.கே.வாசன் தமாகாவை காங்கிரஸில் இணைத்த போது, நானும் அவருடன் சென்றேன்.

இதனை நம்பித்தான்

இப்போது, மீண்டும் தமாகாவை தொடங்கிய வாசன், தமாகாவில் கோஷ்டிகள், கோட்டா முறைகள் ஏதும் இருக்காது. தொண்டர்களின் கருத்தை பிரதிபலிக்கும் இயக் கமாகவே இருக்கும் என்று கூறினார். இதனை நம்பித்தான் நான் உட்பட லட்சக்கணக்கான இளைஞர்கள் தமாகாவில் இணைந்தோம். தமாகா சார் பில் மயிலாப்பூர் தொகுதியில் ஜி.கே.வாசன் போட்டியிட வேண்டும் என்று எனது சார் பாக 5 ஆயிரம் பெண்கள் பணம் கட்டினர். ஒரு வேளை, ஜி.கே.வாசன் போட்டியிட வில்லை என்றால், என்னை அந்த தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டது. ஆனால், முனவர் பாட்சாவுக்கு ஜி.கே.வாசன் வாய்ப்பளித்துள்ளார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது ரூ.25 லட்சத்தில் வாசன் பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கட்சிக்காக நிறைய உழைத் துள்ளேன். தேர்தலில் போட்டி யிட வாய்ப்பளிக்காத வாசன், என்னை அழைத்து ஒரு வார்த் தைகூட ஆறுதல் சொல்ல வில்லை.

அடுத்தகட்ட நடவடிக்கை

இந்த சூழலில், எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எனது ஆதரவாளர்கள் கேட்டனர். அவர்களிடம் கருத்து கேட்டு ஒரு இயக்கமாக செயல்படலாமா என்று பரிசீலித்து வருகிறேன். எனது ஆதரவாளர்கள் சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அதிருப்தியாளர் கூட் டத்தில் தமாகா மயிலாப்பூர் பகுதி தலைவர் மயிலை கணேஷ், வட்டத் தலைவர்கள் ஜிம் ராஜா, பிரகாஷ், கடல் மகேந்திரன், மகளிர் அணி தலைவி கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x