Published : 18 Apr 2016 07:31 AM
Last Updated : 18 Apr 2016 07:31 AM

உடனடி நிவாரண தொகை: அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இருப்பதையடுத்து மீன்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், தடைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாட்கள் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 13 ஆயிரம் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த தடை காரணமாக மீன்களின் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து, காசிமேட்டைச் சேர்ந்த மீனவர் சரவணன் கூறும் போது, மீ்ன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதையடுத்து ஆழ் கடலில் மீன்பிடிப்பதற்கு பதிலாக அண்மைக்கடல் பகுதியில்தான் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இதனால் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.400 வரை விற்கப்பட்ட இறால்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அதிகரித் துள்ளது’’ என்றார்.

இதற்கிடையே, இந்த தடைக் காலத்தில் மீனவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தமிழக அரசு தடைக் கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. புதுச்சேரி அரசு ரூ.4 ஆயிரமாக வழங்கி வருகிறது.

தற்போது தமிழகம், புதுச்சேரி சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், இந்த நிவாரணத்தை தடைக்காலத் திற்குள் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x