Published : 28 Apr 2016 08:44 AM
Last Updated : 28 Apr 2016 08:44 AM

ஜெயலலிதாவுக்கு சொந்தமான மது ஆலை உள்ளது: திமுகவினர் யாருக்கும் மது ஆலைகள் கிடையாது - தஞ்சை கூட்டத்தில் கருணாநிதி தகவல்

திமுகவினர் யாருக்கும் மது ஆலை கள் இல்லை என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்தார்.

தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கருணாநிதி பேசியது:

திமுகவையும், எதிர்க் கட்சி களையும் அடக்குவதிலேயே ஜெயலலிதா ஆர்வமாக உள் ளார். கம்யூனிஸ்ட்கள் எந்தத் தத்துவத்தை சொல்கிறார்களோ அந்தத் தத்துவத்தை செயல் படுத்திக் காட்டும் இயக்கம் திமுக. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, தண்ணீரை விடவும் மலிவாக பணம் வாரி இறைக்கப்படுகிறது. தாங்களே வெற்றி பெற வேண்டும், தாங்களே ஆட்சியை பிடிக்க வேண்டும், தாங்களே கொள்ளையடிக்க வேண்டும் என்ற வகையில் ஒரு கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கிறது. நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கிக் கொண்டுள்ளது.

தமிழர்களைக் காப்பாற்ற நம்மை விட்டால் வேறு கதியில்லை. நாம்தான் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதனால், தியாகத்துக்கு தயாராகுங்கள். எதற்கும் தயார் என்ற சபதத்தை எடுத்துப் பணியாற்றுங்கள். எதிரிகள் வெற்றி பெற்றுவிட்டால், பின்னர் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்ச் சமூகத்தை மீட்க முடியாது.

ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்கிறார். அது, என்ன படிப்படியாக என்று புரியவில்லை. மதுக்கடைகளை திறந்தது கருணாநிதிதானே என்று குற்றம் சாட்டும் ஜெயலலிதாக்கள் உள்ளனர். 1971-ல் மதுவிலக்கு ஒத்திவைக்கப்பட்டு தமிழ்நாட்டு கஜானாவுக்கு வருமானம் செலுத் தப்பட்டது. மீண்டும் 2 ஆண்டு களிலேயே மதுக்கடைகளை மூடிய பெருமை எனக்கு உண்டு.

ஆனால், அப்படி மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறந்து, அரசாங்கமே வியாபாரம் செய்த பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. இன்றைக்கும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மது ஆலை உண்டு. அதில், விலை உயர்ந்த மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், திமுகவினர் யாருக்கும் மது ஆலைகள் கிடையாது. மது வியாபாரம் செய்ததும் கிடையாது” என்றார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x